தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழ்நாடு

பொன்முடி இன்று பதவியேற்கவில்லை: ஆளுநர் தில்லி பயணம்!

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

புதன்கிழமை காலை தீர்ப்பின் நகல் கிடைத்ததை தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று இன்று காலை பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

இன்று காலை விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டும் 16-ஆம் தேதிதான் சென்னை திரும்புகிறார்.

இதனால், பொன்முடியின் அமைச்சர் பதவியேற்பு நிகழ்வு 3 நாள்களுக்கு பிறகே நடைபெற வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT