முகப்பு
தமிழ்நாடு

வாகனப் பேரணி! கோவை வந்தார் பிரதமர் மோடி!

பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தடைந்தார்.

Updated On : 18 மார்ச், 2024 at 12:16 PM
பகிர்:

பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தடைந்தார்.

கர்நாடகத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி வாகனப் பேரணி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கவுள்ளார்.

கோவை சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கும் வாகனப் பேரணி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது.

பிரதமரின் வருகையையொட்டி கோவையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் இருபுறங்களிலும் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.