அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் DOTCOM
தமிழ்நாடு

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

DIN

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை காலை கையெழுத்தானது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாமக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக அதிமுக மற்றும் பாஜகவுடன் பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்றிரவு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

“மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாமக இருந்து வருகின்றது. வருகின்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் நலன் கருதி, மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் மாற்றம் வர இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது வெறுப்பான சூழல் உள்ளது. மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதனை பூர்த்தி செய்ய தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT