தமிழ்நாடு

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

DIN

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜனும், கரூர் மக்களவைத் தொகுதியில் அண்ணாமலையும் போட்டியிடவுள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் பரவி வருகின்றன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மாநில காங்கிரஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.

அந்தப் பட்டியலில், தென் சென்னை தொகுதியில் தமிழிசை செளந்தரராஜனும், கரூரில் அண்ணாமலையும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் ஏ.பி. முருகானந்தம், திருச்சியில் ஆசிர்வாதம் ஆச்சாரியா, சிதம்பரத்தில் தடா பெரியசாமி, சிவகங்கையில் எம்.சத்யானந்தன், ராமநாதபுரத்தில் எம். முருகானந்தம், தூத்துக்குடியில் ராதிகா சரத்குமார், தென்காசியில் ஆனந்தன் அய்யாசாமி, திருநெல்வேலியில் நயினார் பாலாஜி மற்றும் கன்னியாகுமரியில் விஜயதாரணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

எனினும், இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT