முகப்பு
தமிழ்நாடு

சுங்கச் சாவடிகள் முழுவதும் அகற்றப்படும்: திமுக வாக்குறுதி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

Updated On : 20 மார்ச் 2024, 11:36 am IST
கோப்புப்படம்
பகிர்:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டப் பிரிவு 356 அகற்றப்படும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, கேஸ் சிலிண்டர் ரூ. 500, பெட்ரோல் விலை ரூ. 75 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்பட்டு, மக்களவைத் தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நிலையே தொடர ஆவணம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.