தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  ANI
தமிழ்நாடு

பாஜக 20 தொகுதிகளில் போட்டி: தமாகாவுக்கு 3 ஒதுக்கீடு

DIN

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஏற்கெனவே பாமகவுக்கு 10, அமமுகவுக்கு 2, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் குறித்து தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை செய்த பிறகு அண்ணமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தது. ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திப்பார். அதன்பிறகு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும்.

பாஜக 20 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 4 வேட்பாளர்கள் தாமரை சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர். இன்று மாலைக்கு பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT