தமிழ்நாடு

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை(மார்ச். 22) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான மத்திய காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கார்கே, சோனியா காந்தி, அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் அஜய் குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT