பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மக்களவைத் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டிடுகிறார்.
திண்டுக்கல் ம.திலகபாமா, அரக்கோணம் கே.பாலு, ஆரணி அ.கணேஷ் குமார், மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் ரா. தேவதாஸ், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் ந. அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் போட்டிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.