2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி: டிடிவி தினகரன்
2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மற்றும் திருச்சியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார்.
அதன்படி, தேனியில் டிடிவி தினகரனும், திருச்சியில் செந்தில் நாதனும் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர். தேனியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் முடிவு செய்வார்கள்.
Advertisement
Advertisement
நான் யாரையும் போட்டியாளராக கருதவில்லை. நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை. மக்கள் செல்வர் என்ற பட்டத்தை தேனி மக்கள்தான் வழங்கினார்கள்.
மீண்டும் பிரதமராக மோடிதான் வரவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும்" என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.