தமிழ்நாடு

சிவகங்கையில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

DIN

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஏப்.19 -இல் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆஷா அஜித்திடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மாற்று வேட்பாளராக சிவகங்கை மாவட்டத்தலைவர் சஞ்சய் காந்தி மனுத் தாக்கல் செய்தார்.

இதேபோல் அதிமுக வேட்பாளர் அ.சேவியர் தாஸும் தன்னுடைய வேட்பு மனுவை இன்று பகல் 12.15 மணியளவில் சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆஷா அஜித்திடம் தாக்கல் செய்தார்.

உடன் முன்னாள் அமைச்சர்கள் ஜி.பாஸ்கரன், எம்.ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலர் செல்வமணி, நகரச் செயலர் ராஜா, மாற்று வேட்பாளர் ஆர்.ரத்தினம் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT