நயினார் நாகேந்திரன் பேட்டி DOTCOM
தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுடன் பிரசாரம் செய்வேன்: நயினார் நாகேந்திரன்

“72 வயதாகும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார்.” -நயினார் நாகேந்திரன்.

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நான்காவது நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

“பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 25 ஆண்டுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அந்த மனநிறைவோடு வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் யார் என்று கேட்டால் மோடி என்று சொல்கிறார்கள்.

வல்லரசாக இந்தியா உருவாக வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களாக இருந்தாலும் திருநெல்வேலி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் செய்யவில்லை.

திருநெல்வேலிக்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவேன். 72 வயதாகும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார்.” என அவர் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பால் வழியும்... ஷனாயா கபூர்!

குளிர்காலக் காலை... ஊர்மிளா மடோன்கர்!

ஒரு கன்னியாஸ்திரியின் கதை! Maria படக்குழு நேர்காணல்! | Special Interview | Maria Movie

நாட்டியத் தாரகை... திரிஷா ஷெட்டி!

சொற்களால் முடியாதபோது மௌனம் பேசும்... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT