நயினார் நாகேந்திரன்  
தமிழ்நாடு

2026 தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமையும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

2026 தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமையும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உலக அளவில் இந்தியா வல்லரசு நாடாக மாறும். பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு வர வேண்டும். இந்தியாவை நம்பிதான் மற்ற நாடுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையோடு செயலாற்றி வருகிறார். நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இரண்டு நாள்களுக்கு முன்பாக மலேசியா சென்று தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் 5,000 ஆண்டுகளுக்கு பழமையானது என தமிழையும் தமிழ் பெருமைகளையும் பிரதமர் பேசி உள்ளார்.

ஆனால் முதலமைச்சர் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யவில்லை, முட்டை, டப்பா என்ஜிின் என பேசிக்கொண்டு உள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்த திட்டத்தையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. தற்போது ஒரு நாள் தள்ளி மார்ச் 1ஆம் தேதி பங்கேற்கிறார். மதுராந்தகத்தில் பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிட்டு மாநாடாக அமைந்தது.

அந்த கூட்டம் மிகப்பெரிய உத்வேகத்தையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மனதில் மனமாற்றம் வந்துள்ளது. இது ஆட்சி மாற்றமாக முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் வரும். பேச்சுவார்த்தைக்கு என்று தனியாக குழு அமைக்கவில்லை. எந்தெந்த தொகுதியில் யார்? யார்? போட்டியிடுவார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள் குறித்து பேசுவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் திமுக மாநாட்டில் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு எப்படி பேசிக் கொண்டிருந்தார்களோ? தற்போது அதேபோல் பேசிக்கொண்டு உள்ளனர். 2026 தேர்தல் நிச்சயம் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமையும். திருக்கோயில்களில் வேலைகள் முடியாமலேயே எண்ணிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். முழுமையாக பணிகள் முடிவடையாமல் கும்பாபிஷேகம் நடத்துவது தவறு. அவர்களது ஆட்சிக்கு அது நல்லதல்ல. இவ்வாறு குறிப்பிட்டார்.

BJP state president Nainar Nagendran has stated that the 2026 election will turn out to be a major loss for the DMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் பிப். 13-ல் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: தவெகவினர் மீண்டும் மனு!

குரூப்-2, 2ஏ தேர்வுகள் ரத்து.. தேர்வர்கள் மறியல் - போராட்டம்!

சென்னையில் டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

தொடர் வெற்றிகள்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த இந்திய அணி!

விராட் கோலி சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT