முகப்பு
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தேர்தல் மேலாண்மைக் குழு!

பாஜக தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 11 பிப்ரவரி 2026, 1:46 pm IST
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - ஏஎன்ஐ(கோப்புப்படம்)
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ளதையொட்டி கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசாரம் என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பாஜக, நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மேலாண்மைக் குழுவை அமைத்துள்ளது. பொன். இராதாகிருஷ்ணன், ஆர்.என். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.

மேலாண்மைக் குழு அமைப்பாளர் - பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)

இணை அமைப்பாளர் - எஸ்.ஆர்.சேகர் (மாநில பொருளாளர்)

இணை அமைப்பாளர் - ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)

இணை அமைப்பாளர் - மா. வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)

இணை அமைப்பாளர் - மாலா செல்வகுமார் (மாநில பொதுச் செயலாளர், ஓபிசி அணி)

இணை அமைப்பாளர் - எஸ்.ஆர். ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்)" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

BJP Election Management Committee headed by Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.