சீமான் 
தமிழ்நாடு

மைக் வேண்டாம், வேறு சின்னம் கேட்கும் சீமான்!

மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் முறையிட்டுள்ளார்.

DIN

மக்களவைத் தோ்தலில் களம் காணாமல் ஒதுங்கிவிட்ட, மக்கள் நீதி மய்யத்துக்கு அந்தக் கட்சி கோரியபடி ‘டாா்ச் லைட்’ சின்னம் வழங்கப்பட்டது. அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த தேர்தல்களில், நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், இந்தத் தோ்தலில் ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ எனும் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, சின்னம் கோரி நாம் தமிழா் கட்சி தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தோ்தல் ஆணையம், ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி முறையிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். சீமானின் கோரிக்கை குறித்து இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதேசி கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி: பிரதமர் மோடி அஞ்சலி!

பங்குச்சந்தை: 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; ஐடி, உலோகப் பங்குகள் சரிவு!!

தேசியவாத காங்கிரஸை ஒன்றிணைக்க அஜீத் பவார் விருப்பம்?

பி.டி. உஷா கணவர் சீனிவாசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மீண்டும் மீண்டுமா? கருக்கு முக்கிய சாலையில் ராட்சத பள்ளம்! தீர்வுடன் மாற்றும் தேவை!

SCROLL FOR NEXT