தமிழ்நாடு

தந்தை சமாதியில் வேட்புமனுவை வைத்து உறுதிமொழி ஏற்ற வீரப்பனின் மகள்

DIN

மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் வீரப்பனின் மகள் வித்யா ராணி வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்றுமுன்தினம் அறிமுகம் செய்துவைத்தார். அதில், கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வீரப்பனின் மகள் வித்யா ராணி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் அவரது வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி அவர் எடுத்துக்கொண்டார்.

வீரப்பனின் மூத்த மகள் வித்யா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அப்போது, அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT