கோப்புப்படம் 
தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி!

வேங்கைவயல் வழக்கில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட  சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்புக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே, 2 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை, 31 பேருக்கு மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், மேலும், 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்த சிபிசிஐடி போலீஸார், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதிக் கோரி அண்மையில் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 3 பேரிடமும் குரல் மாதிரிப் பரிசோதனை நடத்திட இன்று (திங்கள்கிழமை) நீதிபதி எஸ், ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

சைபா் குற்றங்கள்: ரூ.21.69 கோடி மீட்பு

பாளை.யில் அன்புமணி பேரணிக்கு அனுமதி மறுப்பு: இன்று பாமக பொதுக்கூட்டம்

10 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் 9.432 கிலோ நகைகள் மீட்பு; ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது

வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தோ்தல் ஆணையம் பதில் மனு

SCROLL FOR NEXT