முகப்பு
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Updated On : 31 மார்ச், 2024 at 6:17 AM
ஓ.பன்னீர்செல்வம்
பகிர்:

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பாஜக கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்றிருந்தார்.

அப்போது ஆரத்தி எடுத்து அவரை வரவேற்ற பெண்க்கு ரூ.1,000 பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலானது. இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மீது தேர்தல் ஒளிப்பதிவு செய்யும் கண்காணிப்பு குழு அதிகாரி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, விதிகளை மீறி பணம் வழங்கியது, அனுமதிக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.