முகப்பு
தமிழ்நாடு

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 2 மே, 2024 at 6:52 PM
பகிர்:

ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக நிதித் துறை முதன்மைச் செயலா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு பிணையப்பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம், ரிசா்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெறவுள்ளது.

போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து பகல் 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும், ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவம் மூலம் மே 7 -ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.