நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!
நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.
மே மாதத்தில் நடைபெறும் கோடை விழாவின்போது மட்டும் சுமாா் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர்.
உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ -பாஸ் முறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட பதிவெண்(TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்துள்ளவர்கள் உரிய ஆவணங்களை உதகை வட்டார அலுவலகத்தில் காண்பித்து இ-பாஸ் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.