தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேக மூட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், திடீரென இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருவதால்,மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தொடங்கியது. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லா அளவுக்கு கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் தாக்கத்தினால் மக்கள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

இந்தநிலையில், ராணிப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை அதிகாலை கருமேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குளிா்ந்த காற்று வீசியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT