வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை கோரிய மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை கோரிய மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் மற்றும் விளம்பரம் செய்வதை தடை செய்யும் நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த கோரிய வழக்கில் அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் மத சின்னம், கட்சித் தலைவர்கள் படங்கள், கட்சிச் சின்னங்கள் ஒட்டத் தடை விதிக்கவும், பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களிலும் வணிக விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.