முகப்பு
தமிழ்நாடு

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

Updated On : 14 மே, 2024 at 9:03 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மேலும், நீலகிரி, கோவை (மலைப் பகுதிகள்), தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 18-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(மே 15) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அடுத்த 5 நாள்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கலில் 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →