FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 மே 2024, 4:35 pm IST
கோப்புப்படம்
பகிர்:

நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்ற காரணத்தினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 20-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தொட்டபெட்டாவும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளைமுதல் (மே 16) 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடியை மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments