கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

சென்னை - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணியின் காரணமாக திருப்பதி செல்லும் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 15 முதல் 31 வரை ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இருவழித்தடங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் சப்தகிரி விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT