தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட தேனி, விருதுநகர், தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.