கோப்புப்படம் 
தமிழ்நாடு

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

DIN

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை சார்பில் வெளியான செய்திக்குறிப்பு:

தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் மே 23 ஆம் தேதி முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

1. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

2. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பெருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

SCROLL FOR NEXT