கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணி நடைபெற்று வருவதால், சென்னை டவ்டன் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணி நடைபெற்று வருவதால், சென்னை டவ்டன் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டி தெரு சந்திப்பு வரை சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளதால், வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பிலிருந்து பட்டாளம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல இயலாது.

எனவே வருகின்ற மே 18 முதல் மே 24 வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படுகிறது.

1. டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள், வடமலை சந்திப்பிலிருந்து பட்டாளம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல இயலாது.

2. அத்தகைய வாகனங்கள் வடமலை தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி வடமலை தெரு, அருணாசலம் தெரு மற்றும் வெங்கடேச பக்தன் தெரு வழியாக செல்லலாம்.

3. வடமலை தெரு, அருணாசலம் தெரு மற்றும் வெங்கடேச பக்தன் தெரு ஆகிய தெருக்கள் ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

4. பட்டாளம் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் அஸ்டபுஜம் சாலை வழியாக டவ்டன் சந்திப்பை நோக்கி செல்லும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் தற்போதைய போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

5. புளியாந்தோப்பு மற்றும் ஒட்டேரி சந்திப்பிலிருந்து மாநகரப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் தற்போதைய போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெஞ்சோடு இழுக்குற... ஜொனிதா!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

SCROLL FOR NEXT