முகப்பு
தமிழ்நாடு

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 மே, 2024 at 9:36 AM
பகிர்:

சென்னையின் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் விரைவில் கட்டமைக்கப்பட உள்ளது.ரூ.823 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் அமைக்கப்பட உள்ள நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரு.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.அதன் பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.சுமார் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கக்கூடிய குறளகம் கட்டடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் அதன் அருகே கட்டப்பட உள்ளது.

மெட்ரோ,புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இனைக்கும் வகையில் 7 நடை மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.தற்போது இந்த பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் நான்கு மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →