மேட்டூர் அணை 
தமிழ்நாடு

வறண்டது மேட்டூர் அணை: காட்சியளிக்கும் நந்தி சிலை

வறண்டது மேட்டூர் அணை: காட்சியளிக்கும் நந்தி சிலை

DIN

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்ததால் நீர் தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி, நீர் பரப்பு 152 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரியும். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது.

பிப்ரவரி 4-ம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி 5-ம் தேதி 69 அடியாக குறைந்ததால் நந்தி சிலையின் தலை பகுதி வெளியே தெரிய தொடங்கியது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியில் இருந்து 49 அடியாக சரிந்தது . இதனால் பண்ணவாடி நீர் தேக்க பகுதியில் மூழ்கி இருந்த 20 அடி உயரம் கொண்ட நந்தி சிலை அதன் பின்புறம் 10 அடி உயரம் கொண்ட ஜலகண்டேஸ்வர ஆலயத்தில் கோபுர முகப்புப் பகுதி வெளியே தெரிந்தது.

இன்றைய நிலவரபடி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.05 அடியாகவும், நீர் இருப்பு 17.21 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜகதீப் தன்கர் வாழ்த்து!

வானவில்... தீப்ஷிகா!

SCROLL FOR NEXT