முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு....!

கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Updated On : 22 மே, 2024 at 10:40 AM
கோப்புப்படம்
பகிர்:

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக, நீா்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், படகு சேவையையும் ரத்து செய்துள்ளதாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா்.

இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →