தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

சென்னை என்ஐஏ கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல்.

DIN

தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) கட்டுப்பாட்டு அறை எண் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த எண்ணிற்கு இன்று காலை தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதுபோன்ற மிரட்டல்கள் வழக்கமாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வரும். ஆனால், என்ஐஏ அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

இதனைத் தொடர்ந்து, மர்ம நபர் தொடர்பு கொண்ட தொலைப்பேசி எண்ணை வைத்து சென்னை காவல்துறையினருடன், என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT