தமிழ்நாடு

புயல்: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல், வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிப்பு.

DIN

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, கோடை மழை பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகின்றது. இதனிடையே வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாளை(மே 24) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக தீவிரப் புயலாக வலுப்பெற்று வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT