புதுக்கோட்டை கணேஷ் நகரிலுள்ள பாதிரியார் ஜான் தேவசகாயம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், பீரோவில் இருந்த 80 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.
குடும்பத்துடன் கோவைக்கு மருத்துவச் சிகிச்சைக்காக சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பிபோது, தங்களின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
கணேஷ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்பநாயும் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.