முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மிதமான மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மிதமான மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 மே, 2024 at 8:52 AM
கோப்புப்படம்
பகிர்:

தென்மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மற்றும் தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் அடுத்த 3-4 நாள்களில் துவங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 4-இல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் (மே 28) நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →