முத்திரைத்தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது.
தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் ஏற்றும் ஸ்டாலினின் திமுக அரசு, உடனடியாக முத்திரைத் தாள் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.