முகப்பு
கோயில் விழாவில் பட்டாசு வெடி விபத்து.
தமிழ்நாடு

கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் பலி 4ஆக உயர்வு

கேரளத்தில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் பலி 4ஆக உயர்வு

கேரளத்தில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 4 நவம்பர், 2024 at 5:26 AM
கோயில் விழாவில் பட்டாசு வெடி விபத்து.
பகிர்:

கேரளத்தில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பிஜூ (38), ஷிபின்ராஜ் (19) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு பலியாகினர். இதையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் கடந்த 28ஆம் தேதி இரவு பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு (எஸ்.ஐ.டி.) கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

24 ஊர்க்காவலர் பணிக்கு 21,000 விண்ணப்பங்கள்! உத்தரகண்ட் வேலையில்லா திண்டாட்டம்!

பட்டாசுகளின் தீப்பொறிகள், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியலின் மீது விழுந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், அண்டை மாநிலமான கர்நாடகத்தின் மங்களூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து வெடிபொருள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கோயில் நிர்வாகத்தினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசை கொளுத்திய ராஜேஷ், கோயிலின் தலைவர் சந்திரசேகரன், செயலர் பரதன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →