சிக்கல் சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்பும் அதிசயம்: திரளானோர் தரிசனம்
சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ. 6) இரவு நடைபெற்றது.
சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இத்தலத்தில், அம்பாள் வேல் நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறாா். இறைவன் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில், அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து சக்தி வேல் பெற்றாா் என்பது ஐதீகம். அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்புவது வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ. 6) இரவு நடைபெற்றது. வேல் வாங்கும்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்பும் அதிசய காட்சியைக் காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதையொட்டி கோயிலில் காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.