நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படம்: எக்ஸ்
தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியிலிருந்து 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்

நாம் தமிழர் கட்சியிலிருந்து 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகுவதாக அறிவிப்பு

DIN

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 10 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் நிகழ்ந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கட்சியுடன் பயணித்ததாகவும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து விலகுவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளர் ஆக பயணித்ததாக தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தேவேந்திரன், செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சியின் மற்ற நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலாக மாறியதால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

SCROLL FOR NEXT