கோப்புப் படம் 
தமிழ்நாடு

பாம்பு கடி அறிவிக்கை செய்யக்கூடிய நோய்: தமிழக அரசு

பாம்புக் கடி உயிரிழப்புகள் அதிகரிப்பால், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழ்நாடு அரசு அறிவிப்பு

DIN

பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவாகியுள்ளது. அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் 19,795 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இருப்பினும், தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாம்பு கடிக்கான போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பாம்பு கடி அறிவிக்கை செய்யக்கூடிய நோய் தமிழ்நாடு அரசாணை வெளியீடு.pdf
Preview

நவ. 6 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பில், ``தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை.

பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்குத் தரவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT