அரிய வகை கடல் பசு. 
தமிழ்நாடு

மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் பசு

பட்டுக்கோட்டை அருகே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசு சிக்கியது.

DIN

பட்டுக்கோட்டை அருகே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசு சிக்கியது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியது.

டெல்லி கணேஷ் மறைவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்

உடனே அந்த கடல் பசுவை கண்ட மீனவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகர் மற்றும் வனவர் கீழத்தோட்டத்திற்கு விரைந்து சென்று மீனவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் கடல் பசுவை விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT