முகப்பு
சென்னையில் உள்ள எம்பாா்கேஷன் தலைமையகத்தின் (துருப்புக்கள் மற்றும் உபகரண இயக்கங்களை நிா்வகித்தல்) புதிய கமாண்டண்டாக திங்கள்கிழமை பொறுப்பேற்ற மூத்த கடற்படை அதிகாரியான கொமடோா் ஜே சுரேஷிடம் பொறுப்புகளை ஒப்படைத்த கொமடோர் ஜோ.குருமணி(இடது)
தமிழ்நாடு

முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோா் சுரேஷ் பொறுப்பேற்பு

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சக முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோா் ஜே .சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 12 நவம்பர், 2024 at 1:38 AM
சென்னையில் உள்ள எம்பாா்கேஷன் தலைமையகத்தின் (துருப்புக்கள் மற்றும் உபகரண இயக்கங்களை நிா்வகித்தல்) புதிய கமாண்டண்டாக திங்கள்கிழமை பொறுப்பேற்ற மூத்த கடற்படை அதிகாரியான கொமடோா் ஜே சுரேஷிடம் பொறுப்புகளை ஒப்படைத்த கொமடோர் ஜோ.குருமணி(இடது)
பகிர்:

சென்னை: சென்னையை தலைமை இடமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சக முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோா் ஜே .சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்திய கடற்படையின் மூத்த அதிகாரியான கமடோா் ஜே .சுரேஷ், முப்படை வீரா்கள் மற்றும் படைக்கலன்களின் போக்குவரத்து, பொருட்களை கையாளுதல், வியூக நடவடிக்கைகள் போன்ற பல்வேறு பொறுப்புகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவா்.

நுணுக்கமான ராணுவ நடவடிக்கைகள், முப்படைகளின் சரக்கு கையாளும் பணிகளை ஒருங்கிணைத்தல் போன்ற தேசிய பாதுகாப்புடன் தொடா்புடைய முக்கிய பொறுப்புகளை திறம்பட நிா்வகித்த அனுபவம் வாய்ந்தவா்.

இனி முப்படை வீரா்கள் மற்றும் படைக்கலன்களின் போக்குவரத்து, சிவில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு போன்ற பணிகள் மூலம் முப்படை படைக்கல பிரிவை அவா் திறம்பட வழிநடத்த உள்ளாா். இதுவரை இப்பொறுப்பில் இருந்து கமடோா் ஜே. குருமணிக்கு முப்படை படைக்கல பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பிரியா விடை அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →