பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டனாக அருண் தேர்வாகியுள்ளார்.
கேப்டன் ஆன அருண் சிவப்பு நிற உடை அணிந்து மற்ற போட்டியாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அருணின் உடையை ஆர்.ஜே. ஆனந்தி திருடி பெண்கள் வீட்டுப் பக்கம் மறைத்து வைத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நாள்தோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதேபோன்று பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் நேரலை செய்யப்படுகிறது.
நேரக் கட்டுப்பாடு கருதி நேரலையில் சிக்கும் சில காட்சிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்படாது. ஒரு சம்பவத்துக்கு பின் விளைவுகள் ஏற்பட்டால் மட்டுமே அந்தக் காட்சி ஒளிபரப்பப்படும்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் பக்கம் இருந்த அருணின் உடையை ஆர்.ஜே. ஆனந்தி திருடி, பெண்கள் வீட்டுப் பக்கம் உள்ள அலமாரியில் வைக்கிறார்.
இதனைக் கண்ட சாச்சனா, ஆனந்தி மாட்டிக்கொண்டதாகவும், ஆண்கள் வீட்டுப்பக்கம் உள்ள அன்ஷிதா இதனைக் கண்ணாடி வழியாக பார்த்துவிட்டதாகவும் எச்சரிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆண்கள் வீட்டிற்கு அன்ஷிதா சென்றுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆனந்தி வெறுமனே பேசுவதோடு மட்டுமல்லாமல், சுவாரசியமாக எதையோ செய்ய முயற்சிப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: பவித்ராவுடன் தரக்குறைவாக சண்டையிடும் சத்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.