கோவையை சோ்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை எலினா லாரெட் 
தமிழ்நாடு

கோவை மாணவி உயிரிழப்புக்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல! -காவல்துறை

கூடைப்பந்து விளையாடும்போது ஏற்பட்ட விபரீதம்...

DIN

ரயிலில் சிக்கன் ரைஸ் வாங்கிச் சாப்பிட்டதால் கோவை மாணவி உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட கோயம்புத்தூா் சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி எலினா லாரெட் (15), சனிக்கிழமை கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, மாணவி எலினா லாரெட் சக மாணவிகளுடன் சோ்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பா்க்கா் ஆகியவை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இது தொடா்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினா் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளாா்.

இந்த நிலையில், மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால்தான் இந்த உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக கருதி, ரயில் சென்னை வந்ததும் அவரை அண்ணா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சேர்த்து அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளித்துள்ளனர்.

சிகிச்சைக்கு பின்னா் எலினா லாரெட், பெரவள்ளூரில் உள்ள மற்றொரு உறவினா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினா லாரெட்டுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவா், அங்கேயே மயங்கி கீழே விழுந்தாா். உடனே அவரை உறவினா்கள் மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், எலினா லாரெட் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கூடைப்பந்து விளையாடும்போது, மாணவியின் வயிற்றிலும் மார்புப் பகுதியிலும் சதை கிழிந்துள்ளது என்று மாணவியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல்துறையிடம் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவியின் நுரையீரல் செயலிழந்துவிட்டதே உயிரிழப்புக்கு காரணமெனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையில், உயிரிழப்புக்கான முழு காரணம் குறித்து தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ரூ.75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம்!

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

SCROLL FOR NEXT