தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு காலம் 90 நாள்களாக அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் முன்பதிவுக்கான காலம் 90 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் முன்பதிவுக்கான காலம் 90 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளைப் பொருத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்புதான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். அண்மையில் 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் முன்பதிவு காலத்தை அதிகரித்து போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இனி 90 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யலாம். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மேலும், போக்குவரத்துத் துறை அமைச்சா் தலைமையில் ஜனவரி மாதம் ஆலோசனை நடைபெற்று, பொங்கல் சிறப்பு பேருந்து தொடா்பான அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூா்வ www.tnstc.in எனும் இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து நிலையங்களிலுள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT