காந்திமதி யானை 
தமிழ்நாடு

திருச்செந்தூர் சம்பவம்: நெல்லையப்பர் கோயில் யானை பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கத் தடை

திருச்செந்தூர் சம்பவத்தின் எதிரொலியாக நெல்லையப்பர் கோயில் யானை பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கத் தடை

DIN

நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை திங்களன்று, பாகன் உள்பட இருவரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோயில் யானை, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்ற யானை நேற்று மாலை அதனுடைய பாகன் உதயகுமார் மற்றும் அவரது நண்பர் சிசுபாலன் ஆகிய இருவரையும் செல்ஃபி எடுக்கும் போது தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் பராமரிக்கப்படும் காந்திமதி யானையின் அருகே பக்தர்கள் யாரும் செல்லவோ ஆசிர்வாதம் வாங்கவோ நேற்று மாலை முதல் அனுமதிக்க படவில்லை.

நேற்று மாலை முதலே யானை கூண்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை பராமரிக்கும் பாகன்கள் மட்டுமே உணவினை வழங்கும் நேரத்திற்கு மட்டும் உள்ளே சென்று உணவினை வழங்கி விட்டு வெளியே வந்து யானை பராமரிக்கப்படும் அறையை பூட்டிவிட்டு செல்கின்றனர்.

யானையை பக்தர்கள் வெளியே இருந்து பார்க்கலாம் ஆனால் யானைக்கு உணவு அளிக்க முயற்சிப்பதோ, ஆசிர்வாதம் பெற முயற்சிப்பதோ கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இந்த நடைமுறை வாய்மொழி உத்தரவாக செயல்படுத்தப்படுவதாக அறநிலையத்துறை சார்பில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT