செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் 
தமிழ்நாடு

மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்

தஞ்சை: ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை - அமைச்சர்

DIN

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

''தஞ்சை அருகே ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.

கொலை நடந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதி கனமழைக்கு வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! 350 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஒசூர் வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்

குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!

பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டவர் 171 நாள்கள் வாழ்ந்த அதிசயம்!

தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்! அவை என்னென்ன?

SCROLL FOR NEXT