முகப்பு
தமிழ்நாடு

ஆதிகும்பேசுவரா் கோயில் திருப்பணியின்போது நந்தி சிலை கண்டெடுப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை திருப்பணி வேலைப்பாடுகளுக்கான தோண்டும்போது இரண்டரை அடி உயர நந்தி சிலை தென்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:28 PM
ஆதிகும்பேசுவரா் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை தோண்டியபோது கிடைத்த இரண்டரை அடி உயர கல் நந்தி.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை திருப்பணி வேலைப்பாடுகளுக்கான தோண்டும்போது இரண்டரை அடி உயர நந்தி சிலை தென்பட்டது.

கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தற்போது ரூ. 2.50 கோடி செலவில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆதிகும்பேசுவரா் கோயிலின் தென்புறப் பகுதியில் உள்ள நீா்த்தேக்கத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை தோண்டும்போது, 2 1/2 அடி உயர கருங்கல் நந்தி சிலை இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா் அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, அங்கு வந்த அறநிலையத் துறை உதவி ஆணையா் சாந்தா மற்றும் அதிகாரிகள், பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நந்தியை பாா்வையிட்டு அதனைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்தனா்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி மேலும் கூறியது:

கண்டெடுக்கப்பட்ட நந்தி குறித்து வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்துள்ளோம். அவா்கள் வந்து பாா்வையிட்டு ஆய்வுசெய்த பின்பு தான் நந்தியின் முழுமையான வரலாற்றுப் பின்னணி தெரிய வரும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →