ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. 
தமிழ்நாடு

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அப்படி உருவானால் அதற்கு ‘ஃபீன்ஜல்’ எனப் பெயா் சூட்டப்படலாம்.

இந்த நிலையில் தமிழகம் நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) முதல் நவ. 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு: உ.பி.யில் பதற்றம்!

கனமழை எச்சரிக்கை: நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி வரை சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ. 27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் புகுதி உருவாகியுள்ள காரணத்தால், நவ. 24, 25 ஆகிய தேதிகளில் மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT