ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு: ரஜினிகாந்த் வாழ்த்து!

அதிமுக ஜானகி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

அதிமுக ஜானகி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

இந்த நூற்றாண்டு விழாவில், ஜானகி ராமச்சந்திரன் உடனான தனது நட்பைக் குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசிய வாழ்த்து விடியோ ஒளிபரப்பப்பட்டது.

அந்த விடியோவில் ரஜினிகாந்த் தெரிவித்ததாவது,

''ஜானகி மிகுந்த தைரியத்துடன் முடிவு எடுப்பவர். யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது; நீங்கள்தான் சரியானவர் என முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார்.

அது மிகப்பெரிய குணம். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதை வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு என்னுடைய வாழ்த்துகள்'' என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய வாழ்த்து விடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு-19 பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி.யை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT