உயா்நீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி: தேவநாதனின் சொத்துகளை முடக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Din

சென்னை: மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளா்களிடம் ரூ. 24 கோடியே 50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிா் சங்கா் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துகளை முடக்கக் கோரி அதன் தலைவா் எம்.சதீஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில், நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்துள்ளாா். ஜாமீனில் விடுதலையானால், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோா் தங்கள் சொத்துகளை விற்கக் கூடும் என்பதால், அவா்களின் சொத்துகளை முடக்கக் கோரி உள்துறை செயலரிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு, காவல் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்!

உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முனைவர் மமதா! எத்தனை பட்டங்கள் முடித்திருக்கிறார்?

பொறியியல் கல்வி! ஒளிமயமான எதிர்காலத்துக்கு மின்னியல்!

தேசியவாத காங்கிரஸ் இணைகிறதா? பாஜகவுடன் கூட்டணி தொடருமா? சரத் பவார் பேட்டி!

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT